திருச்சி: பொது கழிவறையில் அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு

  அனிதா   | Last Modified : 18 Sep, 2019 11:40 am
trichy-rescue-of-an-orphaned-child-in-a-public-restroom

திருச்சி லால்குடி அருகே பொது கழிவறையில் அனாதையாக கிடந்த ஆண் குழந்தை மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

திருச்சி லால்குடியை அடுத்த கல்லக்குடி கே.கே.நகர் பகுதியில் உள்ள பொதுக்கழிவறையில் இன்று அதிகாலை குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதியில் இருந்தவர்கள் வெகுநேரம் குழந்தை அழும் சத்தம் கேட்டு உள்ளே சென்று பார்த்தபோது, பிறந்து சில நாட்களே ஆன ஒரு ஆண் குழந்தை கிடந்துள்ளது. அருகில் யாரும் இல்லாததால் அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக்குழுவினர் குழந்தையை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close