இப்படியும் உங்களை ஏமாற்றலாம்...கவனமா இருங்க..!

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2019 10:23 pm
manapparai-theft-incident

மணப்பாறையில் இரும்புக் கடை உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி மர்ம நபர் ஒருவர் 17 ஆயிரம் பணத்தை நூதன முறையில் திருடியுள்ளார். சிசிடிவியில் பதிவான காட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள திருச்சி சாலையில் இரும்புக் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையில் காசாளராக பர்சாத் அலி என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் கடைக்கு டிப் டாப்பாக ஒரு நபரும், அவருடன் ஒரு பெண்ணும் வந்து கட்டிங் வீல் இரண்டு வாங்கி விட்டு 50 ரூபாயை கொடுத்துள்ளனர். அதற்கு 40 ரூபாய் போக மீதம் 10 ரூபாயை பர்சாத் அலி சம்மந்தப்பட்ட நபரிடம் கொடுத்து விட்டார்.

பின்னர் அந்த டிப்டாப் ஆசாமி தன்னிடம் இருந்த 100 ரூபாய் நோட்டு 20ஐ கடைக்காரரிடம் கொடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கேட்டுள்ளார். அதற்கு கடைக்காரர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுக்கவே, அந்த நோட்டை சம்மந்தப்பட்ட டிப்டாப் ஆசாமி கிழித்து விட்டு நோட்டு கிழிந்திருப்பதாகவும், மாற்றித் தருமாரும் கேட்டுள்ளதை அடுத்து கடைக்காரர் அந்த டிப்டாப் ஆசாமி கொடுத்த கிழித்த நோட்டை வாங்கி வைத்து விட்டு மீண்டும் ஒரு 2 ஆயிரம் நோட்டை கொடுத்துள்ளார். 

இந்த சம்பவமெல்லாம் முடிந்த பின்னர் ஒரு வரிசை ( சீரியல் எண்) எண்ணைச் சொல்லி அந்த எண்ணில் ஏதாவது 2 ஆயிரம் ரூபாய் தாள் இருந்தால் கொடுங்கள் என்று டிப்டாப் ஆசாமி கடைக்காரரிடம் கேட்க கடையில் இருந்த பர்சாத் அலியோ கல்லாவில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்து தேடினார். அப்போது அதில் குறைந்த அளவு பணத்தை வாங்கி தானும் பார்ப்பதாக கூறி பணத்தை பார்ப்பது போல 17 ஆயிரம் ரூபாயை தனது இடது கையில் கடைக்காரருக்கு தெரியாமல் எடுத்து தன்னுடைய பாக்கெட்டில் வைத்து விட்டு பின்னர் சிறிது நேரம் பேசி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விடுகிறார்.

கடைக்கு வந்த அந்த டிப்டாப் ஆசாமி ஆங்கிலம், அரபி, துருக்கி ஆகிய 3 மொழிகளிலும் பேசினார். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close