சென்னை கனமழை: வீட்டு சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

  அனிதா   | Last Modified : 19 Sep, 2019 09:12 am
chennai-rain-woman-death-as-house-wall-collapses

சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய கன மழை பெய்து வருகிறது. ஒரே நாளில் வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மண்ணடி, ஐயப்ப செட்டி தெருவில் வசித்து வந்த ஜெரினா பானு என்பவர் நேற்றிரவு அவரது குழந்தைகள் மற்றும் தாயருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் ஜெரினா பானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வீடு மிக பழமைவாய்ந்தது என்பதல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close