தீபாவளி பண்டிகையின் போது கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் 

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2019 09:18 am
strict-action-will-be-taken-to-charge-extra-minister

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி புரிந்து  பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணபலன்களை  நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும்  போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்  ஆகியோர் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் வழங்கினர்.

விழாவில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து கழகம் என்றாலே மக்கள் சேவை செய்யும் துறை. ஓரு நாளைக்கு 1.75 கோடி மக்களை ஏற்றி இறக்கி வரும் துறை.சேவை துறை என்பதால்  வரவுக்கும் செலவிற்கும்  இடைவெளி அதிகமாக இருக்கின்றது. தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான, பணபலன்கள் இந்த ஆட்சியில் வழங்கப்படுகின்றது. தனியார் போக்குவரத்து முதலாளிகளுக்கு இணையாக அரசு போக்குவரத்து சேவையும் இருந்து வருகின்றது.

 நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்: புதிய மொட்டார் வாகன சட்டம் மக்களை பாதிக்காத வகையில் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அபராதங்கள் குறைக்கப்பட்டு விரைவில் அமல்படுத்தபடும்.தீபாவளி பண்டிகையின் போது கூடுதலாக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில், கோவை மண்டலத்திற்கு உட்பட்ட ஓய்வுபெற்ற 793 பணியாளர்களுக்கு ரூபாய் 164.79 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close