திருச்சி :அண்ணா திராவிடர் கழக ஆலோசனைக் கூட்டம்!

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2019 03:49 pm
trichy-anna-dravida-kalaka-advisory-meeting

அண்ணா திராவிடர் கழக மாவட்ட செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன் கலந்துகொண்டு தொண்டர்களிடம் உரையாடினார் இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துஅவர் கூறுகையில்..

வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது அப்போது முடிவு செய்து போட்டியிடுவோம். டிடிவி தினகரனை நம்பி போன எம்.எல்.ஏ.,க்களை யாரும் கண்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு பதவி போனது தான் மிச்சம்.

ஏராளமான எதிரிகளிடம் இருந்து சசிகலாவை காப்பாற்றி இருக்கிறேன். சசிகலாவுக்கு வெளியில் இருந்து எதிரி வந்திருந்தால் இந்நேரம் தலையை சீவியிருப்பேன். 
உறவில் இருந்து (தினகரன்) வந்ததால் யோசிக்கிறேன். தினகரன் என்ற ஒருவரை தனிமைப்படுத்தினால் மட்டுமே அதிமுக ஒன்றிணையும். அப்போது, சசிகலாவின் தலைமையை ஏற்க தயாராக இருக்கிறேன்.

மத்திய அரசின் திட்டங்களை, தமிழக மக்கள் நலன் குறித்து யோசிக்காமல் தமிழக அரசு அப்படியே செயல்படுத்த விரும்புகிறார்கள். கல்விக் கொள்கைகள் கூட பொது மக்களின் அதிக எதிர்ப்பு வந்ததற்கு பிறகு ஆம் ஆண்டு என மாற்றி அமைத்தனர்

ஆனால், தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை அரசு எதிர்க்க வேண்டும். ஆதரிப்பதை மட்டுமே ஆதரிக்க வேண்டும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சோனியா காந்தி பற்றி பேசியது தவறு. அவர் மட்டுமல்ல, யாரும், யாரையும் தரம் தாழ்த்தி பேச கூடாது. இப்படி இவர்கள் ஆளுக்கொன்று பேசி, மக்களை குழப்பத்தில் வைத்திருகின்றனர். அதை கண்டு கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி சென்று கொண்டிருக்கிறார்.

இனிமேல் தமிழகத்தில் நடிகர்கள் ஆளும் வாய்ப்பு வரவே வராது. மக்கள் நலனில் முழு முனைப்பு காட்டினால் மட்டுமே கட்சிகள் வெற்றியடைய முடியும். அதிமுக ஆட்சியை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றி விட்டார். ஆனால் கட்சியினர் மன வருத்தத்தோடு ஒதுக்கி இருக்கிறார்கள்.  அதிமுக மீண்டும் வெற்றிப் பெற வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதற்கு, தொண்டர்களுக்கு நிறைய மருந்துகள் தர வேண்டியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close