கோவையில் தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்பட்டது!

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2019 04:08 pm
national-nutrition-month-observed-in-coimbatore

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை ஒட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக்கள் குறித்தும் சுகாதாரம் குறித்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் ஃபேஷன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் அடங்கிய குழுவினர் குழந்தையின் வளர்ச்சி மற்றும் வயிற்றுப்போக்கு, ரத்தசோகை, சுகாதாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம் என்னும் நோக்கத்திலும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது ஊட்டச்சத்து பற்றாக்குறை குறித்தும், குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை நோய்கள் குறித்தும் விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியபடி ஊர்வலமாக சென்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியின்போது சத்துணவு ஊழியர்கள் பெண்கள் கும்மியடித்த படி விழிப்புணர்வு பாடல்களை பாடி நடனம் ஆடினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close