நீட் ஆள்மாறாட்டம் எதிரொலி: திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சான்றிதழ்கள் சரிபார்ப்பு

  அனிதா   | Last Modified : 21 Sep, 2019 01:07 pm
certificate-verification

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் எதிரொலியாக திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் நடப்பாண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த 150 மாணவ, மாணவிகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. 

திருச்சி மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி இன்று நடைபெற்றது. மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அர்ஷியா பேகம் தலைமையில், அனடாமிக் துறைதலைவர் ஆனந்தி, பயோ கெமிஸ்ட்ரி துறை தலைவர்  நிர்மலா தேவி, பிசியாலஜி துறை தலைவர் சாந்தகுமாரி ஆகியோர் சான்றிதழ்களை சரிபார்த்தனர். 

நடப்பாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த 67 மாணவர்கள் 83 மாணவிகள் என 150 பேரின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டது. அதேநேரம் கடந்த 2018 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவ மாணவிகளின் சான்றிதழ்களும் விரைவில் சரி பார்க்கப்பட உள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) அர்ஷியா பேகம் தெரிவித்துள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close