கண்டெய்னர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ்!

  அனிதா   | Last Modified : 21 Sep, 2019 04:26 pm
container-truck-strike-withdrawn

சென்னையில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

முறையான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் கடந்த 6 நாட்களாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தம் தொடர்பாக தண்டையார்பேட்டை வட்டாட்சியர் லட்சும் மற்றும் சி.எஃப்.எஸ் நிறுவனத்தினருடன் இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

 இந்த பேச்சுவார்த்தையின் போது, ஒரு லாரியில் 20 அடி கண்டெய்னர் ஏற்றி செல்வதற்கு கூடுதலாக ரூ.1000 வழங்க சி.எஃப்.எஸ் நிறுவனம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறுவதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். 

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close