கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள டீக்கடையில் தீ விபத்து - பயணிகள் மத்தியில் பரபரப்பு.

  Newstm Desk   | Last Modified : 21 Sep, 2019 06:35 pm
fire-accident-in-coimbatore-ukkadam-bus-stand

கோவை உக்கடம் பகுதியில் பொள்ளாச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் கேரளா செல்லும் பேருந்துகள் என மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாக உக்கடம் பேருந்து நிலையம் உள்ளது.  இந்த பேருந்துநிலையத்தில் உள்ளே வரிசையாக தேனீர் கடைகள் அமைந்துள்ளன.

இந்நிலையில் இன்று காலை  திடீரென ஒரு கடையில்  தீ பிடித்து விபத்து ஏற்பட்டது. உடனடியாக  அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் தீயயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தீ பிடித்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close