கோவையில் தொழிலாளர் தின விழா கொண்டாட்டம் ! 

  Newstm Desk   | Last Modified : 21 Sep, 2019 07:43 pm
labor-day-celebration-in-coimbatore

கோவையில் அகில இந்திய மேலாண்மை சங்கம் இணைந்து கல்லூரியில் தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது.

கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள FIRE BIRD ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை கல்லூரியில் பொறியாளர் தின விழா நடைபெற்றது அகில இந்திய மேலாண்மை சங்கத்துடன் இணைந்து நடைபெற்ற இந்த விழாவில் கோவை உட்பட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பொறியியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் பொறியியல் துறை சார்ந்த மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் விதமாக பொது அறிவு மற்றும் பொறியியல் துறை சார்ந்த போட்டி நடைபெற்றது இதில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு லேப்டாப்,மொபைல் போன்கள் போன்ற சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள BIZ LAB ல் மாணவர்களுக்கு தேவையான ஆராய்ச்சிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது.விழாவில் கல்லூரி நிர்வாகிகள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close