தஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்

  அனிதா   | Last Modified : 22 Sep, 2019 08:28 pm
4-people-injured-in-lightning-attack

கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் அருகே கரும்பு தோட்டத்தில் வேலை செய்த விவசாய தொழிலாளர்கள் உட்பட நான்கு பேர் இடி மின்னல் தாக்கி பலத்த காயமடைந்தனர். 

கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் அருகே அணைக்கரை விநாயகன் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் (50). விவசாயியான இவர், அவருக்கு சொந்தமான சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட கரும்பு தோட்டத்தில்  பொங்கல் கரும்பு சாகுபடி செய்து வருகிறார்.

இந்நிலையில்  கரும்பு தோட்டத்தில் சாகுபடி செய்து வந்த கரும்பு தோகையை அறுப்பதற்காக விவசாயி அன்பழகன் மற்றும் அவரது மனைவி பானுமதி, அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி கொளஞ்சி அம்மாள், மாரிமுத்து மகள் அனுப்பிரியா ஆகிய 4 பேரும் கரும்பு தோட்டத்திற்கு சென்று வேலைபார்த்து வந்துள்ளனர். 

அப்போது திடீரென கரும்பு தோட்டத்தில்  மழை பெய்தது.  இடி மின்னலுடன் மழைபெய்ததால் அருகிலுள்ள இருப்பிடத்திற்கு நான்குபேரும் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, இடி மின்னல் தாக்கி அன்பழகன், பானுமதி,கொளஞ்சி அம்மாள் (58) மற்றும் அனுபிரியா (18) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

 உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி அனுப்பி வைக்கப்பட்டனர்.  இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close