ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட நடராஜர் சிலை 37 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு!

  அனிதா   | Last Modified : 23 Sep, 2019 03:33 pm
nadarajar-statue-rescue-after-37-years

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டு தற்போது மீட்கப்பட்ட நடராஜர் சிலை இன்று  கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் உற்சவ மூர்த்தியாக இருந்த 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜர் சிலை கடந்த 1982 ஆம் ஆண்டு திருடப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இரு ஆண்டுகளில் வழக்கை முடித்துக் கொண்டனர். ஆனால் சிலை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் பிரிவு போலீசாரிடம் வழக்கு விசாரணைக்கு வந்த போது நடராஜர் சிலை 4 கண்டங்களைக் கடந்து ஆஸ்திரேலியாவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிலை கடத்தல் பிரிவு போலீசார் சிறப்பு அனுமதி பெற்று 37 ஆண்டுகளுக்குப் பிறகு நடராஜர் சிலையை மீட்டு சென்னை கொண்டுவந்தனர்.

இதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் வழக்குகள் ஒருங்கிணைத்து விசாரிக்கப்படும் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு இன்று நடராஜர் சிலை பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலை குறித்து பல்வேறு தகவலைக் கேட்டறிந்த நீதிபதி மீண்டும் சிலையை சிலை கடத்தல் பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராஜாராமிடம் ஒப்படைத்தார்.

இந்த நடராஜர் சிலை கல்லிடைக்குறிச்சி கொண்டு செல்லப்பட்டு நாளை காலை 7 மணிக்கு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளார். 37 ஆண்டுகளுக்குப் பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர் மீட்கப்பட்ட நடராஜர் சிலை நாளை முதல் பக்தர்களின் வழிபாட்டிற்கு  வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close