பேனர் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு! - திருச்சி கலெக்டரிடம் மனு

  Newstm Desk   | Last Modified : 23 Sep, 2019 08:03 pm
flux-banner-workers-petition-to-trichy-collector

பொதுமக்களுக்கு இடையூறின்றி பிளக்ஸ்சாரம் கட்டும் தொழில் நடத்திடவும், வாழ்வாதாரத்தை காத்திட வலியுறுத்தி பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சென்னையில் அனுமதியின்றி, இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையின் நடுவே ஆளுங்கட்சியினரால் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இளம்பெண் பொறியாளரான சுபஸ்ரீ நிலைதடுமாறி விழுந்து, தண்ணீர் லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பிளக்ஸ் உரிமையாளர்மீது மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், பேனர் கலாச்சாரத்தை தடுக்கும்வகையில் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் பேனர் வைக்க நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது.

பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதிமறுக்கப்பட்டதால் பிளக்ஸ் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அதனை நம்பிவாழும் பேனர் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இடையூறின்றி பிளக்ஸ் சாரம் வைக்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர். 

மேலும் யாரோ ஒருவர் செய்த தவறுக்காக இத்தொழிலையே முடக்குவது நியாயமல்லை, இவர்களது தொழில் முடங்கி தெருவிற்கு வந்துள்ள நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், எனவே இதனை வரைமுறை செய்ய வேண்டும், அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close