கும்பக்கரை அருவியில் குளிக்கத்தடை!

  அனிதா   | Last Modified : 24 Sep, 2019 09:18 am
ban-in-kumbakarai-falls

கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப்பயணிகள் அருவியில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருவதுண்டு. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் தண்ணீர் மூலிகை தன்மை கொண்டதாக இருப்பதால் அருவியில் குளிப்பதற்காக மக்கள் இங்கு குவிவது வழக்கம். 

 இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close