பல்வேறு நாடுகளில் பாரம்பரிய உடையணிந்து  மாணவ மாணவிகள் பங்கேற்ற சர்வதேச சுற்றுலா தினப் பேரணி!

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2019 03:10 pm
international-travel-day-rally-in-coimbatore

சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு கோவையில் மாணவ மாணவிகள் பல்வேறு நாடுகளில் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்ட பேரணி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பயணம் அலாதியானது. அதுவும் மொழி, இனம், நாடு கடந்து சுற்றுலா செல்வதெல்லாம் எல்லோருக்கும் வாய்க்கப்பெறாத அதிசய உணர்வு. சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் செப்டம்பர் 27ம் தேதி சர்வதேச சுற்றுலா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் டிராவல்ஸ் அசோசியன் சங்கத்தினர் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் சமையற்கலை துறை சார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேரணி, கோவையில் நடைபெற்றது. கோவை காந்திபுரம் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே துவங்கிய இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சர்வதேச சுற்றுலா தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தியபடி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியில் 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழர்கள், பஞ்சாபி, உள்ளிட்ட மக்களின் பாரம்பரிய உடைகளுடன் எகிப்து, மங்கோலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பாரம்பரிய உடைகள் அணிந்தும் கலந்து கொண்டது அவ்வழியே சென்ற பார்வையாளர்களையும், வாகன ஓட்டிகளையும் வெகுவாக கவர்ந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close