சங்ககிரியில் நடைபெற்ற கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாமில் , 5 கோடியே 4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

  Newstm Desk   | Last Modified : 28 Sep, 2019 06:31 pm
the-welfare-program-has-been-provided-with-special-welfare-assistance-amounting-to-rs-5-crore

சங்ககிரியில் நடைபெற்ற குறைதீர்க்கும் சிறப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களை முதலமைச்சர் பெற்றார், 5 கோடியே 4 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் 

சேலம் மாவட்டம் சங்ககிரியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன் வரவேற்றார், மேலும் இவ்விழாவில் சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், கெங்கவல்லி, ஏற்காடு, மேட்டூர், சேலம் மேற்கு உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்களிடமிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார்,

இதனைத்தொடர்ந்து ரூ 5 கோடியே 4 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தற்சமயம் பெறப்பட்ட மனுக்களில் உடனடி தீர்வாக 10 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க ஆணை வழங்கப்பட்டது, இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட  மனுக்கள் மீது துறை  வாரியாக உடனடியாக தீர்வு காணப்படும் என முதல்வர்  தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close