கோவை: இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி​​​​​​​

  Newstm Desk   | Last Modified : 29 Sep, 2019 01:56 pm
coimbatore-awareness-rally-of-heart-day

இன்று உலக இருதய தினம் கடைபிடிக்கப்படும் வேளையில், இளம் வயதிலேயே அதிகரிக்கும் இருதய நோய்க்கான காரணம் குறித்தும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்தும் வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இருதய நோய்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக இருதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒன்றே முக்கால் கோடி பேர் இருதய நோயால் தங்களது இன்னுயிரை இழப்பதாகவும் அதில் 75 லட்சம் பேர் மாரடைப்பாலும் 67 லட்சம் பேர் வாத நோயாலும் இறக்கின்றனர். 

இளம் வயதில் ஏற்படும் இருதய நோய்கள் புகைப் பழக்கம், கட்டுப்பாட்டில்லாத மதுப் பழக்கம், முட்டை, இறைச்சி, நெய் போன்ற கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணுதல், அளவுக்கு அதிகமான உடல் எடை, உடற்பயிற்சியின்மை போன்றவை முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. உலகில் 13 சதவிகித இருத நோயால் ஏற்படும் மரணங்கள் ரத்த அழுத்தத்தாலும், 9 சதவிகிதம் புகைப்பழக்கத்தாலும், 6 சதவிகிதம் நீரிழிவு மற்றும் உடற்பயிற்சியின்மையாலும், 5 சதவிகித மரணம் அதிக உடல் எடையால் ஏற்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.

எனவே இருத நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று கோவை ரேஸ் கோர்ஸ் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி அவர்கள் கொடி அசைத்து துவக்கிய பின் 100க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவர்கள், இருதய நோய்கள் குறித்தான பதாகைகள் ஏந்தியபடி 3கிலோ மீட்டர் அவரை நடைபயணமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close