சேலம் : தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம்!

  Newstm Desk   | Last Modified : 30 Sep, 2019 01:41 pm
salem-signature-movement-ahead-of-national-nutrition-month

சேலத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம்நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்துகொண்டு தனது முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.

தொடர்ந்து கடுமையான எடை குறைவு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மேம்படுத்த நெய் உள்ளிட்ட சத்துப் பொருட்களை தாய்மார்களிடம் வழங்கினார் தொடர்ந்து சத்தான உணவுகள் குறித்து விளக்க கண்காட்சியை பார்வையிட்டார் இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் சேலம் மாவட்ட திட்ட அலுவலர் பரிமலா தேவி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close