திருச்சியில் தனியார் கல்லூரி பேராசிரியை கடத்த முயன்றவருக்கு போலீஸ் வலைவீச்சு

  Newstm Desk   | Last Modified : 30 Sep, 2019 03:43 pm
trichy-a-college-professor-was-kidnapped

திருச்சியில் தனியார் கல்லூரி பேராசிரியை கடத்தல்  சம்பவத்தில் தொடர்புடைய  நபரை போலீஸ் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருச்சி மலைக்கோட்டை வடக்கு வீதியை சேர்ந்தவர் ஜோதி பெரியசாமி -  நாகலட்சுமி தம்பதியினரின் மகள் 
மகாலட்சுமி. சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில்
உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று காலை மகாலட்சுமி தனது தோழியுடன் வழக்கம்போல் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மலைக்கோட்டை பகுதி அதிமுக பொருளாளரும் அமராவதி கூட்டுறவு சங்க இயக்குனருமான வணக்கம் சோமு என்பவர் 
ஒரு ஆம்புலன்சில் வந்து மகாலட்சுமியை கடத்த முயன்றபோது தடுக்கமுயன்ற தோழியை தள்ளிவிட்டு மகாலட்சுமியை வேனில் கடத்தி சென்றுவிட்டார்.

இதுகுறித்து மகாலட்சுமி பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் தீவிரவிசாரணை மேற்கொண்டனர். செல்போன் சிக்னல் அடிப்படையில் துவரங்குறிச்சி அருகே  வேன்  சென்றுகொண்டிருப்பது தெரியவந்தது . இதனையடுத்து சினிமா பட பாணியில் வேனை  போலீசார் விரட்டிச் சென்றபோது, இதனை அறிந்த வணக்கம் சோமு  மகாலட்சுமியை அங்கேயே  இறக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டார். மகாலெட்சுமியை மீட்ட காவல்துறையினர் தப்பியோடிய சோமுவை தேடிவருகின்றனர்.

கடத்தலில் ஈடுபட்ட சோமு ஏற்கனவே திருமணமாகி  இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தன்னை காதலிக்கவேண்டும் என மகாலெட்சுமியை தொடர்ந்து வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.  மகாலெட்சுமி காதலிக்க மறுத்ததால் அவரை சோமு கடத்தியுள்ளதாக தெரிகிறது.

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close