கும்பகோணம்: நாகேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

  Newstm Desk   | Last Modified : 03 Oct, 2019 08:49 am
kumbakonam-natyanjali-event-held-at-nageswar-temple

கும்பகோணத்தில் நாகேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் மாணவிகளின் பரத நாட்டியம் அனைவரையும் கவர்ந்தது.

கோவில் நகரமான கும்பகோணத்தில் நவராத்திரி விழா அனைத்து ஆலயங்களிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்  நாகேஸ்வரர் கோவிலில் ஆடல் வல்லான் நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

குற்றாலக் குறவஞ்சி பாடலுக்கு மாணவிகள் தாம்பாளத்திலும், பானை மீது நின்றும் நடனம் ஆடியது பார்வையாளர்களை வியக்க வைத்தது. மேலும் மாடு மேய்க்கும் என்ற கண்ணனின் பாடலுக்கு நடனம் ஆடிய மாணவி அனைவரையும் கவர்ந்தாள். இந்நிகழ்ச்சியை அனைவரும் ஆர்வமுடன் கண்டு கழித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close