திருச்சியில் வெள்ளரி ரக கடல் அட்டைகளை விமானத்தில் கடத்த முயன்ற ஒருவர் கைது!

  Newstm Desk   | Last Modified : 04 Oct, 2019 12:46 pm
man-arrested-for-hijacking-sea-creature-in-trich

மலேசியாவிற்கு விமான மூலம் கடத்தப்பட இருந்த பதப்படுத்தப்பட்ட அரிய வகை கடல் உயிரினமான 211 கடல் அட்டைகளை கிடைத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். 

கடல் வாழ்  உயிரினங்களில் மிக அறிய வகையான வெள்ளரி வகை கடல் அட்டைகள் மிகுந்த மருத்துவ குணம் கொண்டவை என கருதப்படுகிறது. இந்த வகை அட்டைகளுக்கு வெளிநாட்டு கள்ள சந்தைகளில் நல்ல மவுசு உள்ளது.  இதன் காரணமாக வெள்ளரி அட்டைகளை கடத்தும் முயற்ச்சி அடிக்கடி அரங்கேறிய வண்ணம் தான் உள்ளது. 

இந்நிலையில்  திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் வான் நுண்ணறிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில்,  கீழக்கரையை சேர்ந்த ஆஸஃப் முஹம்மது எனபவர்  நொறுக்கு தீனி பாக்கெட்டுகளுக்குள் மறைத்து எடுத்து வந்த  211 கடல் வெள்ளரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  விசாரணையில் இந்த கடல் அட்டைகளை மலேசியாவிற்கு  கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.  

கடத்தலில் ஈடுபட்ட கீழக்கரையை சேர்ந்த ஆஸஃப் முஹம்மது என்பவரை வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  கைது செய்த வன துறையினர், இந்த கடத்தலில் வேறு யாரேனும் உடந்தையாக உள்ளனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close