கோவை : வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

  Newstm Desk   | Last Modified : 05 Oct, 2019 11:57 am
coimbatore-north-regional-traffic-office-raided

வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 1.80 லட்சம் பணம் உள்பட 500 க்கும் மேற்பட்ட  ஆர்.சி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை துடியலூர் பகுதியிலுள்ள வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை  நடத்தினர். துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையில் சுமார் நான்கு மணி நேரமாக  இந்த சோதனையானது நடைபெற்றது.இந்த சோதனை முடிவில் கணக்கில் வராத  1.80 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதோடு இருநூறுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட பணத்தில் 70 ரூபாய் இடைத்தரகளால் தூக்கியெறியப்பட்ட பணப்பை(மணி பர்ஸ்) மற்றும் கவர்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மீதமுள்ள பணம் அலுவலுக ஊழயர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆர்சி புத்தகங்களும் 200-க்கும் மேற்பட்ட ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  அலுவலகம் மூடிய பிறகு புரோக்கர்களுக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் என்ன வேலை? என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் குமாரவேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில்  கலந்து கொண்டதன்  காரணமாக  அவர் திரும்பி வந்தவுடன் குமாரவேலிடம்  விசாரணை நடைபெற்று வருகின்றது.

மேலும்  இந்த சோதனையில் ஒரு மோட்டார் போக்குவரத்து அலுவலர் விசாரணையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்  இடைத்தரகர்கள் 22 பேர்,அலுவலக ஊழியர்கள் 8 பேர்,மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close