கும்பகோணம்: 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

  அனிதா   | Last Modified : 06 Oct, 2019 12:25 pm
kumbakonam-10-year-old-girl-sexually-abused

கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (57). இவர் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு உடல் முழுவதும் கடித்து வைத்துள்ளார். சிறுமியின் காயத்தை கண்ட பெற்றோர் அவரிடம் விசாரித்த போது, நடந்தவற்றை சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த பெற்றோர் பந்த நல்லூர் காவல்நிலையத்தில் செல்லத்துரை மீது புகார் அளித்தனர். புகாரின் பேரில் கைது செய்த காவல்துறையினர் அவரை தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close