12ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

  அனிதா   | Last Modified : 06 Oct, 2019 12:44 pm
man-arrested-for-abducting-and-sexually-abusing-12th-std-student

கும்பகோணத்தில் 12ஆம் வகுப்பு சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கும்பகோணம் பந்தநல்லூரை அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கமலேஷ் (23). இவர் பந்தநல்லூர் காலனி தெருவை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியை (வயது 16) கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி கற்பமாகினார். இது குறித்து அவரது பெற்றோர் பந்தநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவான கமலேஷை போலீசார் தேடி வந்தனர். 

இந்நிலையில், கமலேஷ் அவரது குடியிருப்பு பகுதிக்கு வந்தததை அறிந்த பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் சுகுணா அவரை மடக்கி பிடித்து கைது செய்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close