கராத்தே மாணவ மாணவிகளுக்கு தகுதிப்பட்டை வழங்கும் விழா- 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

  Newstm Desk   | Last Modified : 06 Oct, 2019 09:38 pm
competition-for-karate-students-over-500-students-participated

ஷோட்டோகான் கராத்தே வேல்டு பெடரேஷன் சார்பில் திருச்சியில் கராத்தே மாணவ மாணவிகளுக்கு தகுதிப்பட்டை வழங்கும் விழா திருச்சி சுப்பிரமணிய புரத்தில் நடைபெற்றது.

இந்த தேர்வில் கராத்தேயின் அடிப்படை தொழில்நுட்பங்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு ஆபத்து ஏற்படும் போது தன்னை தானே தற்காத்து கொள்ள உதவும் தற்காப்பு பயிற்சியும்,  கராத்தே கட்டாஸ், குமிட்டே டெக்னிக் பயிற்சி அளிக்க பட்டது. 

இந்த தகுதிப்பட்டை வழங்கும் விழாவில் திருச்சி , கோவை, கரூர், புதுக்கோட்டை , சேலம், சென்னை இது போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட கராத்தே வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டு பயிற்சியின்போது கற்ற கராத்தே யுக்திகளை செய்து காண்பித்து அசத்தினர்.

இதில் பெண்மணி ஒருவர் தீயில் எரியும் ஓட்டினை தலையால் உடைத்து பார்ப்போரை பிரமிக்க வைத்தார்.  இந்த தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு S.K.W.F - ன் சார்பில் தகுதி பட்டையும் அதற்கான சான்றிதழ்களும் தலைமை பயிற்சியாளர் கராத்தே சங்கர் வழங்கினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close