சேலம்: இரண்டு பேருந்துக்கள் மோதிய பயங்கர விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயம்!

  அனிதா   | Last Modified : 10 Oct, 2019 10:49 am
salem-bus-accident

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் பைபாஸ் பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதிய பயங்கர விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

வாழப்பாடியில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று இராமலிங்கபுரத்தை அடுத்த அயோத்தி பகுதியில் வலது புறமாக திரும்பி அயோத்தியாபட்டணம் செல்ல முற்பட்டபோது இடதுபுறமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் அரசுப் பேருந்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட பயணிகளும் தனியார் கல்லூரி பேருந்தில் இருந்த மாணவ, மாணவியரும் பலத்த காயமடைந்தனர்.

இந்த பயங்கர  விபத்தால் அயோத்தியாபட்டணம் பகுதியில் புறவழி சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்கள் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  இந்த விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close