கும்பகோணம் அருகே  பள்ளிவாசலில் கொள்ளை!!

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2019 02:33 pm
theft-at-the-thiruppanandal-next-to-kumbakonam-jami-ji-a-school

கும்பகோணத்தை அடுத்த தத்துவாஞ்சேரி ஜாமி ஆ பள்ளிவாசலில்  கடப்பாரையால் கதவை உடைத்து உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில்  உள்ள உண்டியல், ஆம்லிஃபயர், மைக்செட் போன்றவைகள் கொள்ளைப்போய் உள்ளன.

பள்ளிவாசலில் நேற்று  இரவு தொழுகை முடிந்த உடன் பள்ளிவாசல் கதவு அடைக்கப்பட்டு ஜமாத் நிர்வாகிகள் சென்றனர். பின்னர் அதிகாலை  ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் தொழுகைக்காக பள்ளிவாசல் சென்றனர் அப்போது பள்ளிவாசல் கதவு கடைப் பாறையால் உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

அப்போது பள்ளிவாசல் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு, அலுவலகத்தில் உள்ள பீரோ மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. தகவல் அறிந்த திருப்பனந்தாள் காவல்துறை ஆய்வாளர் கவிதா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த இடத்தை பார்த்து அங்குள்ள சி.சி.டி.வி.கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது  பள்ளிவாசலில் மர்ம நபர் ஒருவர் கதவை  உடைத்து உள்ளே புகுந்தது கேமராவில் பதிவாகி உள்ளது.
தஞ்சையிலிருந்து தடவியல்  நிபுணர்கள் வரவழைத்து கைரேகையை ஆய்வு செய்து வருகின்றனர்.அந்த மர்ம மனிதர் எதற்காக பள்ளிவாசல் உட்புறம் கதவு உடைத்து  சென்று உண்டியல் மற்றும் பீரோக்களை உடைத்தார் என தெரியவில்லை

பள்ளிவாசலில் உள்ளே புகுந்த மர்ம நபரை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிவாசலில் நிர்வாகிகள் இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து திருப்பனந்தாள் காவல்துறை வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close