கும்பகோணத்தில் மத்திய அரசின் சுற்றலா அமைச்சகத்தின்  சார்பில் ஐராவதீஸ்வரர் கோவிலில் சுத்தப்படுத்தும் பணிகள்!

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2019 04:55 pm
cleaning-of-irawadheeswarar-temple-at-kumbakonam-on-behalf-of-the-union-government

மத்திய அரசின் சுற்றலா அமைச்சகத்தின் தூய்மையே சேவை இயக்கம் சார்பில்  தாராசுரத்தில் உள்ள உலக பாரம்பரிய சின்னமான ஐராவதீஸ்வரர் கோவிலில் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுற்றுலா வளர்ச்சிக்காக 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மனித சங்கிலியும் நடைபெற்றது.

கும்பகோணத்தில் மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் தூய்மையே சேவை இயக்கம் செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் அக்டோபர் 27 ஆம் தேதி வரையிலும், அனைவருக்கும் சுற்றுலாவான பரியத்தன் பர்வ் என்ற கலாச்சாரத் திருவிழா அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக  தாராசுரத்தில் உள்ள யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஐராவதீஸ்வரர் கோவிலில் இன்டாக் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் தூய்மைபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதே போன்று அனைவருக்கும் சுற்றுலா என்பதை வலியுறுத்தும் விதமாக 500 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள், தேசிய மாணவர் படை, சாரண-சாரணியர் இயக்கத்தினர் கலந்து கொண்ட மனித சங்கிலியும் நடைபெற்றது. இதில்  வருவாய் கோட்டாட்சியர் வீராச்சாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close