கும்பகோணம் : அரசு பள்ளியின் விளையாட்டு மைதானம், மாட்டு இறைச்சியின் கழிவுகளை கொட்டும் கூடாரமாக மாறிய அவலம் !

  Newstm Desk   | Last Modified : 12 Oct, 2019 09:03 pm
kumbakonam-the-playground-of-the-government-school-which-was-turned-into-a-tent-where-cow-meat-waste

கும்பகோணத்தில் அரசு பள்ளியின் விளையாட்டு மைதானம், மாட்டு இறைச்சியின் கழிவுகளை கொட்டும் கூடாரமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மாறிய அவலநிலையால், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் .

கும்பகோணத்தில்  ஏ.ஆர்.ஆர் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு  சொந்தமான இரண்டு ஏக்கர் பள்ளி மைதானத்தை கடந்த 18 வருடமாக பள்ளி மாணவ மாணவிகளுக்களின்  பயன்பாட்டிற்கும் கொடுக்குமாறு அப்பகுதியில் பொதுமக்கள்  பல முறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. அதோடு அந்த இடத்தில் மாட்டு இறைசியின் கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் விசுவதோடு நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த  அப்பகுதி பெண்கள்  நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து  ஆர்ப்பாட்டம் செய்தனர். 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close