பேரிடர் விழிப்புணர்வு: தத்ரூபமாக செயல் விளக்கம் அளித்த தீயணைப்பு துறையினர்

  அனிதா   | Last Modified : 13 Oct, 2019 06:41 pm
disaster-awareness-realistically-explained-firefighters

 திருவிடைமருதூரில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு  வட்டார தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறை சார்பில் விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு  வட்டார தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறை சார்பில் ஆடுதுறை வீரசோழன் ஆற்றுப்பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரும் ஆபத்திலிருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்து தத்துரூபமாக  தீயணைப்பு துறையினர் செய்து காண்பித்தனர். இதில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்றும் கடும் புயல், வெள்ள அபாயத்திலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் கண்டனர். மேலும் ஆடுதுறை வீரசோழன் ஆற்றுப் பகுதியிலிருந்து பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வருவாய்த்துறையினர், பேரூராட்சி ஊழியர்கள், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட  ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close