திருச்சி: இயற்கை பூச்சிகொல்லி மருந்து தயாரிக்க கற்று கொடுத்த மாணவிகள்

  அனிதா   | Last Modified : 15 Oct, 2019 09:54 am
trichy-students-teach-to-make-natural-pesticides

மணப்பாறை அருகே விவசாயிகளுக்கு இயற்கையான முறையில் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் முறையை தோட்டக்கல்லூரி மாணவிகள் பொதுமக்களுக்கு கற்றுக் கொடுத்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியப் பகுதிகளுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தோட்டக்கலை மற்றும் இயற்கை விவசாயம் குறித்து அரசு மகளிர் தோட்டக்கல்லூரி மாணவிகள் பல்வறு நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 
இந்நிகழ்ச்சிகளில் விவசாயிகள் தங்களுக்கு தெரிந்ததை மாணவிகளிடம் தெரிவிப்பதோடு மாணவிகள் தங்களுக்கு தெரிந்ததை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று முள்ளிப்பாடியில் இயற்கையான முறையில் காய்கனிகளை தயாரித்து பயன்படுத்திடும் வழிமுறைகளை கற்றுக் கொடுத்தனர். அதுமட்டுமின்றி செடிகளுக்கு இயற்கையாக முறையில் பூச்சிக் கொல்லி மருந்து தயாரித்து அதை பயன்படுத்திடும் வகையில் மீன்கரைசல், பூச்சிக்கொல்லி, பஞ்சகாவ்யம் ஆகியவற்றை தயாரிக்கும் முறைகளை விவசாயிகளுக்கும், இளம் தலைமுறையினருக்கும் செயல்முறையுடன் கற்றுக் கொடுத்தனர். 

அப்போது மாட்டுச்சாணம், கோமியம், மீன் கழிவு உள்ளிட்டவைகளை ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் கொட்டி அதில் தேவையானவற்றை சேர்த்த பின் எந்தவித துர்நாற்றமும் இன்றி நறுமனம் வீசுவதை சிறுவர்களை அழைத்து நுகரச் செய்து காண்பித்தனர். இளம் தலைமுறையினர் இதுபோன்ற விவசாயம் மற்றும் தோட்டக்கலையில் இயற்கையான முறையில் விவசாயம் செய்தால் மகசூல் அதிகம் இருப்பதோடு ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தனர்.

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close