கோவை: சுங்கசாவடி சாலையில் இளைஞரை கத்தியால் குத்திவிட்டு ரூ.30 லட்சம் கொள்ளை!

  அனிதா   | Last Modified : 15 Oct, 2019 02:52 pm
coimbatore-youth-stabbed-on-tollgate-road

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே, இளைஞரை கத்தியால் குத்திவிட்டு ரூ.30  லட்சத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியை சேர்ந்த்த தமிழரசன், சிவராஜ் ஆகியோர் நேற்றிரவு புல்லட் இரு சக்கர வாகனத்தில் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்களது இரு வாகனத்துக்கு முன்பு FZ  இருசக்கர வாகனத்தில், கோவையை சேர்ந்த தர்ஷன், ராகுல் குமார் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர்.

கணியூர் சுங்கச்சாவடியை அடுத்த மேம்பாலம் அருகே இரு சக்கர வாகனங்கள் வந்து கொண்டிருந்த போது, தமிழரசன், சிவராஜ் வந்த இருசக்கர வாகனம் தர்ஷன், ராஜ்குமார் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அப்போது அங்கு அவர்களை பின்தொடர்ந்து 4 இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள்  ராகுல்குமாரின் முதுகில் கத்தியால் குத்திவிட்டு  அவரிடம் இருந்த ரூ.30 லட்சத்தை பறித்துச் சென்றனர்.

இந்நிலையில் கத்திகுத்து காயமடைந்த  ராகுல்குமார் மற்றும் விபத்தில்  படுகாயமடைந்த தர்ஷன், தமிழரசன், சிவராஜன்  ஆகியோரை   அவ்வழியாக சென்றவர்கள்  மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராகுல் குமார்  கோவை அரசு மருத்துவமனையிலும், மற்ற 3 பேரும் ஒண்டிப்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராகுல் குமார் கொண்டு வந்த பணம் யாருடையது  என்பது குறித்தும் கொள்ளையடித்து சென்றவர்கள் யார் என்பது குறித்தும் கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close