அப்துல்கலாம் பிறந்தநாள்: இசை மீட்டி மரியாதை செலுத்திய மாணவர்கள்!

  அனிதா   | Last Modified : 15 Oct, 2019 03:17 pm
abdulkalam-birthday

திருச்சியில் அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி  பள்ளி மாணவ, மாணவிகள் இசை மீட்டி மரியாதை செலுத்தினர். 

இளைஞர்களை கனவுகாணச்சொல்லி நாளைய இந்தியா மாணவர்கள் கையில் என்றுகூறி மாணவர்களை அறிவுசார் மற்றும் தன்னம்பிக்கை பல்கலைக்கழகமாக மாற்றிய இளைஞர்களின் விடிவெள்ளி முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் 88வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அப்துல்கலாமின் பிறந்தநாளை சிறப்பிக்கும்வகையில், இளைஞர்களின் எழுச்சிதினமாக கடைபிடிக்கப்பட்டுவரும் இந்நாளில் திருச்சி சத்திரம் பேருந்துநிலையத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏவுகணை நாயகன், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் திருவுருவச் சிலைக்கு பள்ளி மாணவ, மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர்  பேண்டு வாத்தியங்கள் இசைத்து கலாமிற்கு இசை மரியாதை செலுத்தி மகிழ்ந்தனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close