சேலம்-கரூர் பயணிகள் ரயில் சேவை துவக்கி வைப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 15 Oct, 2019 06:30 pm
launch-of-salem-karur-passenger-rail-service

சேலம் -கரூர், பழனி-கோவை, பொள்ளாச்சி-கோவை ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தெற்கு ரயில்வேயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இயக்கி வரப்பட்ட சேலம்-கரூர்-சேலம், பழனி-கோவை-பழனி, பொள்ளாச்சி-கோவை-பொள்ளாச்சி (டிஇஎம்யூ-டெமு) ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவை தற்போது நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் புதுதில்லியில் இருந்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் சேலம்-கரூர், பழனி-கோவை, பொள்ளாச்சி-கோவை ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவையை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேலம், கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. 
சேலத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற  நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் வண்டி எண் 76801-76802 சேலம்-கரூர் பயணிகள் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

சேலம்-கரூர் ரயில்:

வண்டி எண் 76801 சேலம்-கரூர்-சேலம் பயணிகள் ரயில் சேலத்தில் இருந்து பகல் 1.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 3.25 மணிக்கு சென்றடையும். வண்டி எண் 76802 கரூரில் இருந்து காலை 11.40 மணிக்குப் புறப்பட்டு, சேலத்திற்கு பகல் 1.25 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் வங்கல், மோகனூர், நாமக்கல், காலாங்கனி, ராசிபுரம், மல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும்.

கோவை-பழனி ரயில்:

வண்டி எண் 56609 கோவையில் இருந்து பகல் 1.45 மணிக்குப் புறப்பட்டு, மாலை 4.40 மணிக்கு பழனி சென்றடையும். வண்டி எண் 56608 பழனியில் இருந்து காலை 10.45 மணிக்குப் புறப்பட்டு, பகல் 2.10 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் புஷ்பத்தூர், மடத்துக்குளம், மாய்வாடி சாலை, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். வாரத்தில் 7 நாள்களும் இயக்கப்படும்.

பொள்ளாச்சி-கோவை ரயில்:

வண்டி எண் 56184 பொள்ளாச்சியில் இருந்து காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு, கோவைக்கு 8.40 மணிக்கு வந்தடையும். வண்டி எண் 56183 கோவையில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு, காலை 7 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும். இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாள்களும் இயக்கப்படும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close