பஞ்சாப் வங்கிக் கொள்ளை: லலிதா ஜுவல்லரி குற்றவாளிக்கு 7 நாள் போலீஸ் காவல்!!!

  Newstm Desk   | Last Modified : 18 Oct, 2019 06:50 pm
lalitha-jewellery-thief-ganesh-police-custody-for-national-bank-robbery

பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக லலிதா ஜுவல்லரி குற்றவாளி கணேசன் 7 நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி. அதேநேரம் எந்தவித துன்புறுத்தலும் அளிக்கக்கூடாது என்றும் நீதிபதி சிவகாமசுந்தரி உத்தரவிட்டுள்ளார்.

லலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த கணேசன் நெம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதால், கணேசனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீரங்கத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவகாமி சுந்தரி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.

பின்னர் 7 நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து, குற்றவாளிி கணேசனை விசாரிக்க, நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவகாமி சுந்தரி அனுமதி வழங்கினார். அதேநேரம் எந்தவித துன்புறுத்தலும் அளிக்கக்கூடாது என்றும் நீதிபதி சிவகாமசுந்தரி உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட போது கீழே சிதறி கிடந்த 1 லட்சத்து 74 ஆயிரம் பணம்,  53 சவரன் தங்க நகைகளை அதன் உரிமையாளர்கள் சூரியாஜமால், உமா மகேஸ்வரி, சுரேஷ்குமார் ஆகிய 3 பேரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close