மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

  அனிதா   | Last Modified : 19 Oct, 2019 09:41 am
mettur-dam-water-inflow-is-low

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 34,722 கன அடியில் இருந்து 27,985 கன அடியாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் பெய்த மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 34,722 கன அடி வந்து கொண்டிருந்து. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணைக்கு வரும் நீர் வரத்து 27,985 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.270 அடியாகவும், அணையின் நீர் இருப்பு - 87.646 டி.எம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 2,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close