இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி: கணவன், மனைவி கைது!

  அனிதா   | Last Modified : 19 Oct, 2019 10:05 am
husband-and-wife-arrested-for-fraud

வெளிநாடுகளில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உரிமை பெற்றுத் தருவதாகவும், இரட்டிப்பாக பணம் தருவதாகவும் கூறி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.  

சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள கிரீன் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் இயங்கிவரும் ஆர்.எம்.வி குரூப் நிறுவனங்களின் உரிமையாளர் மணிவண்ணன் என்பவர் தனது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 100 நாட்களில் இரட்டிப்பாக பணம் தருவதாகவும்  மேலும் ஊறுகாய், மசாலா வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் வகைகள் ஆகியவற்றை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்கு பணம் கொடுத்தால் விநியோக உரிமை பெற்றுதருவதாகவும் கூறி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோரை கவர்ந்து கோடிக்கணக்கில் முதலீடுகளை பெற்று உள்ளார்.

இது தொடர்பாக இவரிடம் முதலீடு செய்து ஏமாந்த சேலம் அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மணிகண்டன் மற்றும் அவரது மனைவி இந்துமதி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மணிகண்டனின் மோசடிக் செயல்களுக்கு அவரின் சகோதரர்கள் ராம் மற்றும் லட்சுமணன் மாமனார், மாமியார் சரஸ்வதி அவரது அலுவலக ஊழியர்கள் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது .

மணிவண்ணன் மற்றும் அவரின் மனைவி ஆகியோரிடமிருந்து இரண்டு லேப்டாப்,  2 டேப் , 13 செல்போன்கள் 2 சொகுசு கார்கள் 10 பவுன் எடையுள்ள ஒரு தங்கச் செயின்,  2 தங்க வளையல்கள் , ரூ.50,000 ரொக்கம் மற்றும் போலி ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

மணிகண்டனால்  இதுவரை 350 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் மணிவண்ணனிடம் பல கோடி ரூபாயை இழந்து, சொத்து சுகங்களை இழந்து நடுத்தெருவில் நிற்பவர்கள் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம் குகை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் அரிசி கடை வைத்து தொழில் செய்து வருகிறார். அவரை மூளைச்சலவை செய்து மணிகண்டன் அவரிடம் இருந்து 3 கோடியே 53 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். கார்த்திகேயன் கொடுத்த பணத்தை இரட்டிப்பாக்கி தராமல் காலம் தாழ்த்தி வருகிறீர்கள் என்று மணிகண்டனிடம் கேட்டபோது கொன்றுவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதன் பெயரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மணிகண்டன் என்பவர் 2 கோடியே 82 லட்சம் ரூபாயை மணிவண்ணனிடம் கொடுத்துள்ளார் . அங்கம்மாள் காலனியை சேர்ந்த பெண் ஒருவர் 63 லட்சம் ரூபாயை வெளிநாட்டில் விநியோக உரிமை பெற்று தருவதாக கூறிய மணிவண்ணனிடம் கொடுத்து ஏமாந்து உள்ளார்.

இவர்களிடமிருந்து மோசடி செய்த பணத்தில் அடிக்கடி வெளிநாடுகளுக்கு உல்லாசப் பயணம் சென்று மணிவண்ணன் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இவை அனைத்தையும் விசாரணையில் வெளிக்கொண்டுவந்த போலீசாருக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் போலி நிறுவனங்கள் மற்றும் மோசடி பேர்வழிகளிடம் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு அவர்கள் கூறும் பொய்யான வாக்குறுதிகளை நம்பி பணம் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அவர்  அறிவுறுத்தியுள்ளார்.

Newstm.in 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close