கொள்ளைக்கு பயன்படுத்திய சுற்றுலா வேன் பறிமுதல்!

  அனிதா   | Last Modified : 19 Oct, 2019 10:55 am
van-seized-used-for-robbery

திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளைக்கு பயன்படுத்திய சுற்றுலா வேன் சோழவந்தானில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரில் துளையிட்ட மர்ம நபர்கள் உள்ளே சென்று நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதனிடையே கடந்த 2 ஆம் தேதி திருச்சி லலிதா ஜூவல்லரி கடையில் அதே பாணியில் சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். 

திருச்சி ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கைதான நபர்களிடன் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த கும்பல்தான் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும், ஜூவல்லரி கொள்ளையில் மூளையாக செயல்பட்ட முருகன் என்பவர்தான் வங்கி கொள்ளையிலும் மூளையாக செயல்பட்டு அவரது நண்பர்களுடன் பணம், நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கணேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், கணேஷ் அளித்த தகவலின் பேரில் வங்கி மற்றும் ஜூவல்லரிக்கு கொள்ளைக்கு பயன்படுத்திய சுற்றுலா வேனை காவல் ஆய்வாளர் மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க முருகன் கும்பல் சுற்றுலாப் பயணிகள் போல் வேனில் தப்பி சென்றது தெரியவந்துள்ளது.  வங்கி கொள்ளை தொடர்பாக போலீசார் மேலும் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close