ஸ்ரீரங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை!

  அனிதா   | Last Modified : 19 Oct, 2019 11:46 am
raid-in-srirangam-registrar-s-office

ஸ்ரீரங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய தீடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ. 1,31,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில்  லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையில் 4 ஆய்வாளர்கள் உட்பட 10 பேர் கொண்ட குழு நேற்று மாலை ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில்   பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சார் பதிவாளர் ராஜேந்திரன் அவருடைய உதவியாளர் சுந்தர்ராஜ் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 1,31,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என டி.எஸ்.பி மணிகண்டன்  தெரிவித்துள்ளார். இந்த திடீர் சோதனை திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close