தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  கிராம திருவிழா கொண்டாடிய பள்ளிக்குழந்தைகள் 

  Newstm Desk   | Last Modified : 19 Oct, 2019 05:23 pm
schoolchildren-celebrating-diwali-in-kumbakonam

கும்பகோணத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் சிறப்பு தீபாவளி மேலா பெற்றோர் விதவிதமாக சத்தான உணவு வகைகளை சமைத்து  காட்சிப்படுத்தி அசத்தினார்.

கும்பகோணத்தில் நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடி மகிழும் பண்டிகையான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு  தனியார் பள்ளியில் இன்று உணவு திருவிழா நடைபெற்றது இதில் பெற்றோர் தங்கள் பங்காக குழந்தைகளுக்கு தேவையான விதவிதமான பல்வகை சத்தான ஆரோக்கியமான உணவு பண்டங்களை தங்கள் கரங்களால் நேர்த்தியாக செய்து மேளாவில் காட்சிப்படுத்தி அசத்தினார் குறிப்பாக பாரம்பரிய உணவுகளான கம்பு அடை தோசை பணியாரம் வரகு அரிசி புட்டு முறுக்கு சீடை அதிரசம் ஆரோக்கிய கசாயம் என எண்ணற்ற உணவு பண்டங்களை பார்வைக்கு வைத்திருந்தனர்.

மேலும் பள்ளி குழந்தைகளுக்கும் தங்கள் வயதிற்கு ஏற்ப சிறு சிறு பொருட்களை செய்து அவற்றை விற்பனை செய்கின்றனர் பல்வேறு விதமான போட்டிகளும் நடத்தப்பட்டது .  மேலும்  நகரப்பகுதி குழந்தைகள் இதுவரை பயன்படுத்தாத மாட்டு வண்டி சவாரி, குதிரை சவாரி, யானை சவாரி, ஒட்டக சவாரி என பல விதமான சவாரிகளை ஏற்ப்பாடு செய்திருந்தனர். பள்ளி வளாகம் முழுவதும் சிறிய கிராம திருவிழா போல கோலாகலமாக காட்சியளித்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close