திருச்சி திருவெறும்பூர் அருகே தனியார் பள்ளி மாணவ மாணவிகள் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தனர்

  Newstm Desk   | Last Modified : 19 Oct, 2019 05:46 pm
private-school-students-did-yoga-world-record-in-trichy

திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 1001 மாணவ மாணவிகள் 21 நிமிடங்கள் தொடர்ந்து பத்மாசனம், சிரசாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்தனர். இதையடுத்து 10 நிமிடங்கள் தொடர்ந்து மனதை ஒரு நிலைப்படுத்தி தியானத்தில் ஈடுபட்டு உலக சாதனை படைத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் சூசைராஜ் தலைமை வகித்தார் பள்ளியின் துணை முதல்வர் ஜார்ஜ் பெர்னான்டஸ் முன்னிலை வகித்தார். ருத்ர சாந்தி யோகாலயம் குருஜி கிருஷ்ணகுமார் மாணவ மாணவிகளுக்கு யோகாசனத்தின் படிநிலைகளை பயிற்றுவித்தார்.

1001 மாணவ மாணவிகள் ஒரே இடத்தில் அமர்ந்து செய்த இந்த யோகாசனங்கள் பதஞ்சலி புக் ஆப் ரெக்கார்ட்சில் உலக சாதனையாக பதியப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக மாணவ மாணவிகள் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவகையில்  பாட்டில்களில் நீர் நிரப்பி செயற்கை நீருற்றாக செய்து காண்பித்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close