வேளாங்கண்ணி சர்ச்சில் உயிரிழந்த தலைமை காவலர்!

  அனிதா   | Last Modified : 20 Oct, 2019 03:09 pm
chief-guard-death-at-velankanni-temple

வேளாங்கண்ணி சர்ச்சில் பிராத்தனையின் போது மாரடைப்பால் தலைமை காவல் உயிரிழந்த சம்பவம்  காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் காந்திபுரத்தை அடுத்த காட்டூர் காவல் நிலைய குற்றப் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் பவுல் ஆல்பர்ட் (வயது 54). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி ஜோதி, மகன் ரிச்சர்ட் மற்றும் உறவினர்களுடன் வேளாங்கண்ணி சர்ச்சிற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சென்றுள்ளார். நேற்று மாலை 6.30 மணியளவில் கோவிலில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நாகப்பட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தலைமைக்காவலர் ஆல்பர்ட் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைமைக் காவலரின் உடலுக்கு காவல் ஆணையர் மற்றும் துணை காவல் ஆணையர் உட்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close