சேவல் சண்டை - 20 பேர் கைது

  அனிதா   | Last Modified : 20 Oct, 2019 05:04 pm
cock-fighting-20-arrested

சென்னை கொடுங்கையூரில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தமிழகத்தில் சேவல் சண்டையினால், மோதல், கலவரங்கள் வெடித்ததையடுத்து  தமிழக காவல்துறை சேவைல் சண்டைக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் தடையை மீறி சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை கொடுங்கையூரில் இன்று சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சேவல் சண்டை நடத்தியவர்கள் மற்றும் விளையாட்டில் ஈடுபட்டவர்கள் 20 பேரை கைது செய்தனர். மேலும், ரூ.5000 பணம் மற்றும் 4 சேவல்களை பறிமுதல் செய்தனர். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close