கும்பகோணம்: ஆஞ்சநேயர் சிலை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

  அனிதா   | Last Modified : 21 Oct, 2019 11:05 am
kumbakonam-anjaneyar-statue-theft

கும்பகோணத்தில் புகழ்பெற்ற பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ள ஆஞ்சநேயர் கற்சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். 

கும்பகோணத்தில் உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். கோவிலின் உள்ளே தனியாக துர்க்கை அம்மன் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு  12 மணி அளவில் கோவில் பூஜையை முடித்துக்கொண்டு கணேஷ் என்பவர் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.

அப்போது, கோவிலின் வளாகத்தில் சின்ன கிணத்து மேடு அருகில் உள்ள ராமர் திருத்தம் என்ற இடத்தில்  ஒரு அடி உயரத்தில் இருந்த ஆஞ்சநேயர் கல் சிலை மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து கணேஷ் ஐயர் கோயில் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, புலவர் செல்வசேகரன் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின்பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது மர்மநபர் ஆஞ்சநேயர் சிலையை பெயர்த்து எடுப்பது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தனிப்படை அமைக்கப்பட்டு ஆஞ்சநேயர் சிலையை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close