மலேசியா விமானம் ரத்து!

  அனிதா   | Last Modified : 23 Oct, 2019 03:55 pm
malaysia-flight-canceled

திருச்சியில் இருந்து மலேசியா செல்ல இருந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

திருச்சியில் இருந்து இன்று காலை 9.25 மணிக்கு புறப்பட இருந்த ஏர் ஏசியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தொழில் நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இதில் பயணம் செய்வதற்காக 87 பேர் டிக்கெட் பதிவு செய்திருந்தனர். இந்த திடீர் ரத்தால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.  இன்று இரவு 10.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் விமானத்தில் அந்த விமான பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என ஏர் ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close