அசைவின்றி இருக்கும் குழந்தை சுர்ஜித்!

  அனிதா   | Last Modified : 26 Oct, 2019 11:18 am
rescue-operation-for-surjith

திருச்சி மணப்பாளை அருகே ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தை சுர்ஜித் அசைவின்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் 2வயது குழந்தை சுர்ஜித் நேற்று விளையாடி கொண்டிருந்தபோது, மாலை 5.40 மணியளவில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்தான். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் குழந்தை எதிர்பாராத விதமாக 70 அடி ஆழத்திற்கு சென்றான். இதனிடையே குழந்தையின் மீது மண் விழுந்ததால் குழந்தையை மீட்பதில் பின்னடைவு ஏற்பட்டது. 

தற்போது, ஆழ்துளை கிணற்றில் விழுத்த மண் அகற்றப்பட்டுள்ளது. குழந்தை சுர்ஜித் அசைவின்றி உள்ளான். இடுக்கி போன்ற கருவி மூலம் குழந்தை சுர்ஜித்தை மீட்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close