பாறையின் தன்மை குறித்து குழியில் இறங்கி ஆய்வு

  அனிதா   | Last Modified : 28 Oct, 2019 01:05 pm
inspect-the-pit

கடினமான பாறையின் தன்மை குறித்து கண்டறிய குழிக்குள் வீரரை இறக்கி ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

குழந்தை சுர்ஜித் சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றின் அருகே மற்றொரு கிணறு தோண்டப்பட்டு வருகிறது.  அதி நவீன ரிக் இயந்திரம் மூலம் பணி நடைபெற்று வரும் நிலையில் கடினமான பாறைகளால் தொடர்ந்து பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் 2 வது ரிக் இயந்திரத்தின் டிரில் பிட்டும் பழுதானதால், பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக மீட்பு படை வீரர் நகைமுகன் 45 அடி ஆழமுடைய புதிய குழிக்குள் ஏணி வைத்து இறங்கி குறியீடு செய்தார். இதையடுத்து, போர்வெல் மூலம் துளையிடும் பணி நடைபெற்றுவருகிறது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close