திருச்சியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது!

  கண்மணி   | Last Modified : 31 Oct, 2019 05:00 pm
cauvery-water-disciplinary-committee-meeting-in-trichy

காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன் குமார் தலைமையில்  கடந்த 18 கூட்டங்கள் டெல்லி மற்றும் பெங்களூருவில் நடைபெற்றது. தற்போது முதன்முதலாக தமிழகத்தில் திருச்சியில் 19ஆவது குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஒழுங்காற்று குழுவின் உறுப்பினர் செயலர் நீரஜ் குமார் மற்றும் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களின் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள், ஆலோசகர்கள், விஞ்ஞானிகள் என 16 உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

 மேலும் இக்கூட்டத்தில் இன்று காவிரி நீர் வரத்து மற்றும்  காவிரி நீர்பிடிப்பு, காவிரி நீர் இருப்பு மற்றும்  ஒழுங்காற்று குழு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு முன்னதாக கிபி இரண்டாம் நூற்றாண்டில்  கட்டப்பட்டதும், உலகின் முதல் நீர் மேலாண்மை அணையும் ஆன கல்லணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் மேலும் அங்கு காவிரி ஆற்றின் நீர் வழித் தடங்களையும் பயன்பெறும் தமிழக டெல்டா பகுதிகளின் வரைபடத்தினை பார்வையிட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close