தலாக் கூறி விவாகரத்து கேட்ட கணவர் மீது வழக்கு பதிவு

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2019 05:27 pm
case-filed-against-husband

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து 4 மாதங்களிலேயே தலாக் மூலம் விவாகரத்து கேட்ட கணவர் மீது திருமண பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோவை அன்னூர் கே.கே. வீதியை சேர்ந்தவர் முகமது செரீப், இவரது மகன் முகமது அலி (32).  மனைவி வாஜியா (24) போத்தனூர் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர். இருவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் வாஜியா போத்தனூர் போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். 

அதில் முகமது அலி தன்னை திருமணம் செய்து கொண்டு வரதட்சனை கேட்டு மிரட்டுவதாகவும், முகமது அலி மற்றும் அவரது குடும்பத்தாரும் சேர்ந்து உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் வாஜியாவை பிடிக்கவில்லை எனத் தெரிவித்து, தலாக் என கூறி விவாகரத்து கேட்டு, வாஜியாவை போத்தனூர் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் விட்டு சென்றதாகவும் தெரிவித்தார். 

இதையடுத்து போத்தனூர் போலீஸார் முகமது அலி மற்றும் அவரது உறவினர்களான பானு, ஜக்காரியா, பாஷா, நிஷா, அன்வர், உள்ளிட்ட ஏழு பேர் மீது வரதட்சனை கொடுமை 498(A) மற்றும் இஸ்லாமிய பெண் திருமண பாதுகாப்பு சட்டம் (3r/w4 ) – 2019.  பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வழக்கானது ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close