பொள்ளாச்சி பாலியல் வழக்கில்  கைது செய்யப்பட்டவர்கள் மீதான குண்டர்சட்டம் ரத்து !

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2019 03:25 pm
thug-act-in-pollachi-case-canceled

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு மற்றும் சபரி ராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

இதனை எதிர்த்து சபரி ராஜன், திருநாவுக்கரசர் தாயார் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,, குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்கள் தெளிவாக இல்லாத காரணத்தால் இருவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close